சுவிட்சர்லாந்தின் பிரிபோர்க் நகரத்தில் முதல் ஒரு மணி நேரம் வாகன நிறுத்துமிட கட்டணத்தை இலவசமாக்கும் நகராட்சியின் முயற்சிக்கு வாக்காளர்கள், ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த யோசனையை தொழில்முறை சங்கங்கள் மற்றும் பரந்த வலதுசாரி கூட்டணியின் ஆதரவுடன், Artists கட்சி முன்வைத்திருந்தது.
நேற்று நடந்த வாக்கெடுப்பில் இந்த யோசனைக்கு ஆதரவாக 57.7% வாக்குகள் அளிக்கப்பட்டன.
இடதுசாரி பெரும்பான்மை உள்ள இந்த நகராட்சியில் இந்த முடிவு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இதற்கேற்ற விதிமுறைகளை உருவாக்க முயற்சிப்போம் என்று Friborg மேயர் Thierry Steiert, தெரிவித்துள்ளார்.
ஆங்கில மூலம் – swissinfo