யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டையைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், ஆயிரத்துக்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட சிறப்பு குற்றதடுப்பு பிரிவினரால் நேற்று இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் 24 மற்றும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையின் பின்னர் இவர்களை இன்று நீதிமன்றில் முன்நிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.