இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பின்னர், 44,430 வாகனங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்களும் அடங்குகின்றன.
பொருளாதார நெருக்கடியை அடுத்து, டொலர் கையிருப்பை பேணுவதற்காக, அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு தடைவிதித்தது.
அந்த தடையை மீறியே இந்த வாகனங்கள் விற்பனைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.