பின்தொடர்வதை ஒரு தனி குற்றமாக்குவதற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தின் பிரதிநிதிகள் சபை நேற்று வாக்களித்தது.
பின்தொடர்வதில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பான பிரேரணை 151 உறுப்பினர்களின் ஆதரவு மூலம் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கு எதிராக 29 வாக்குகள் அளிக்கப்பட்ட அதேவேளை, 9 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
இதையடுத்து இந்த பிரேரணை செனட் சபைக்கு அனுப்பப்படுகிறது.
பின்தொடர்தல் என்ற புதிய குற்றம் தொடர்பான, ஆணை சட்ட விவகாரக் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவின்படி, யாரேனும் ஒருவரை விடாப்பிடியாகப் பின்தொடர்ந்து, துன்புறுத்தி அல்லது அச்சுறுத்தி, அதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை வாழ்வதற்கான சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தினால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
ஆங்கில மூலம் – swissinfo.ch