29.9 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

சுவிஸ் சிறைகளில் அதிகளவு தற்கொலை மரணங்கள்.

சுவிட்சர்லாந்தில் சிறைச்சாலைகளில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஐரோப்பிய கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில்  சராசரிக்கும் குறைவான  சிறைக்கைதிகளே உள்ள போதிலும்,  சிறைச்சாலை தற்கொலை மரணங்கள் அதிகமாக இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டில் சுவிஸ் சிறைகளில் உள்ள ஒவ்வொரு 10,000 கைதிகளில் சராசரியாக 20.2 பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.

ஐரோப்பா முழுவதும், இந்த எண்ணிக்கை 5.3 பேராக இருந்தது, லட்வியாவில் மட்டுமே சிறைச்சாலை தற்கொலை அதிகமாக (21.7) இருந்தது.

சுவிட்சர்லாந்தில் 100,000 மக்களுக்கு 73 பேர் கைதிகளாக சிறைகளில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் சிறைகளில் உள்ள கைதிகளில், நான்கில் ஒருவர், வெளிநாட்டவராக இருக்கின்ற நிலையில் சுவிட்சர்லாந்து சிறைகளில் இருப்பவர்களில் 71 வீதமானோர் வெளிநாட்டவர்கள் என்றும், ஐரோப்பிய கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மூலம் – swissinfo.ch

Related Articles

Latest Articles