செலவுகள் மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ள போதிலும், சுவிட்சர்லாந்தின் பெரும்பான்மையான மக்கள் இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு விடுமுறையையாவது வெளிநாட்டில் கழிக்கும் ஆர்வத்துடன் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்த ஆண்டில் ஒரு முறையாவது சுற்றுலாப் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மேலும் பாதிப் பேருக்கும் மேல் குறைந்தது மூன்று முறை பயணத்தை எதிர்பார்க்கின்றனர்.
இதில், றைந்தது ஒரு இரவு தங்கும் வகையிலான பயணம் உள்ளிட்ட, அனைத்து தனிப்பட்ட பயணங்களும் அடங்கும்.
இந்த ஆய்வுக்குப் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர், மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்கு செல்லத் திட்டமிடுகின்றனர்.
ஐந்தில் ஒருவர், ஐரோப்பா அல்லாத இடங்களுக்குச் செல்வதை இலக்காகக் கொண்டுள்ளனர்.
குறைந்த வருமானம் உள்ளவர்களை விட, அதிக வருமானம் கொண்டவர்கள் மற்ற கண்டங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கில மூலம் – swissinfo.ch