-2.6 C
New York
Thursday, January 16, 2025
spot_img

மகிந்தானந்தவினால் மாடிப்படியில் தள்ளி விடப்பட்ட ராஜபக்சவின் கால் எலும்பு முறிவு

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடந்த ஆளும் கட்சி எம்.பிக்களின் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலை அடுத்து, மாடிப்படியில் தள்ளிவிடப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச படுகாயமடைந்த நிலையில், இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களா குணதிலக ராஜபக்சவிற்கும், மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், கூட்டத்தின் முடிவில் இருவருக்கும் இடையில்,  மீண்டும் முரண்பாடு ஏற்பட்டது.

மஹிந்தானந்த அளுத்கமகே அவரைத் தள்ள முற்பட்ட போது குணதிலக்க ராஜபக்ச மாடிப்படியில் விழுந்து, அவரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ச இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

குணதிலக்க ராஜபக்ச எம்.பியுடன் தாம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஆனால் அவரை தள்ள முயற்சிக்கவில்லை என்றும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles