19.6 C
New York
Tuesday, September 16, 2025
spot_img

நெடுஞ்சாலையில் தரையிறங்கப் போகும் சுவிஸ் போர் விமானங்கள்!

சுவிட்சர்லாந்தில் போர் விமானங்கள் நெடுஞ்சாலையில் தரையிறங்கிப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.

அவசரநிலைக்குத் தயார்படுத்தும் வகையில், எட்டு F/A-18  போர் விமானங்கள், நெடுஞ்சாலையில் தரையிறக்கப் பயன்படுத்தப்படும் என சுவிஸ் விமானப்படை அறிவித்துள்ளது.

சுவிஸ் விமானப்படையின் அனைத்து வளங்களும் தற்போது Payerne, Meiringen மற்றும் Emmen ஆகிய மூன்று இராணுவ விமானதளங்களில் குவிந்துள்ளதால் இந்த சோதனை அவசியம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது நீண்ட தூர எதிரி ஆயுத அமைப்புகளினால் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், துருப்புக்கள் மற்றும் உபகரணங்களை நாடு முழுவதும், விரைவாக பரவலாக்குவது குறித்து விமானப்படை கவனம் செலுத்துகிறது.

இந்தப் பயிற்சி ஜூன் 5ஆம் திகதி நடைபெறும்.

இதனை முன்னிட்டு, A1 நெடுஞ்சாலை நியூசட்டல் ஏரிக்கு தெற்கே, Avenches மற்றும் Payerne இடையே,  ஜூன் 4 ஆம் திகதி 21:00 மணி முதல், அதிகபட்சம் 36 மணி நேரம் மூடப்படும்.

கடைசியாக, 1991 ஆம் ஆண்டு டிசினோவில் சுவிஸ் போர் விமானங்கள் மோட்டார் பாதையில் தரையிறங்கிய பயிற்சிகளை மேற்கொண்டிருந்தன.

Related Articles

Latest Articles