யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறையில் மதுபானசாலை அனுமதியை நிறுத்தக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறையில் சட்டவிரோதமாக இயங்கி வருகின்ற மதுபான சாலைக்கான அனுமதியை நிறுத்த கோரி ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன் ஊர்க்காவற்துறை சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவற்துறையில் பிரபலமான பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம் என்பனவற்றுக்கு அண்மையாக மதுபான சாலை சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் இதனால் சமூகப் புரள்வான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதனால் தீவக மக்களின் நலன் கருதி மதுபானசாலைக்கான அனுமதியை வழங்க கூடாது என தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பதாகைகளை தாங்கியும் , மதுபான சாலை அனுமதியை நிறுத்த கோரி கோஷங்களை எழுப்பியவாறும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது மதுபான சாலை அனுமதியை ரத்துச் செய்யக் கோரி கையொப்பமும் பெறப்பட்டது