ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிக்கொப்டர் மீது தாக்குதல்கள் ஏதும் மேற்கொள்ளப்பட்டமைக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
மலைப்பகுதியில் விழுந்ததும் ஹெலிக்கொப்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. அது தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் இல்லை என ஈரான் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹெலிக்கொப்டர் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஈரான் இராணுவத்தின் இந்த அறிக்கை, அரச தொலைக்காட்சியில் வெளியாகியுள்ளது.
ஹெலிக்கொப்டருடனான தொடர்பாடல்களின் போது சந்தேகத்திற்கு இடமான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும், ஹெலிகொப்டர் அதன் பயண பாதையில் இருந்து விலகவில்லை என்றும், ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் ஹெலிக்கொப்டர் விபத்திற்கு எவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.