23.2 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

படையினரை நினைவுகூரும் நிகழ்வு இன்று – வெளிநாடு சென்றார் ஜனாதிபதி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நிறைவுக்கு வந்ததை குறிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் நடக்கவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கம், மே 19ஆம் திகதியை போர் வெற்றி நாளாக கொண்டாடி வந்தது. இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைக் காயப்படுத்துவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், போர் வெற்றி நாளை, போரில் உயிரிழந்த படைவீரர்களான நாளாக கொண்டாடுகின்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டின் போர் வீரர்கள் நினைவு நாள் இன்று பிற்பகல் 4 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள போர் வீீரர்கள் நினைவுச் சின்னம் முன்பாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கமாட்டார். அவர் நேற்றைய தினமே இந்தோனேசியாவுக்கு புறப்பட்டுச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles