3 C
New York
Tuesday, December 3, 2024
spot_img

யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை – சில குடும்பங்கள் பாதிப்பு.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் மழையினால் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில், ஜே/91 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும், ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் வேலணை பிரதேச செயலர் பிரிவில், ஜே/26 கிராம சேவகர் பிரிவில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக கடுமையான வெயிலினால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles