17 C
New York
Tuesday, April 29, 2025
spot_img

ஜி.வி.பிரகாஷ், சைந்தவி பிரிய என்ன காரணம்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிகள் தங்களது 11 ஆண்டு கால வாழ்க்கையை முடித்துக் கொண்டு தற்போது பிரிந்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன் தான் ஜி.வி.பிரகாஷ். ஜென்டில் படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை தனது மழலை குரலில் பபாடியிருந்தார்.

பின்பு வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளரான இவர், அடுத்தடுத்து பாடல்களின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தார். 

பல முன்னணி பிரபலங்களின் படங்களில் இசையமைத்த இவர், நடிகராகவும் வலம் வந்தார். இவர் நடித்த சில படங்கள் ஓடவில்லை என்றாலும், டார்லிங் படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.

பள்ளி நாட்களில் இருந்தே காதலித்து வந்த ஜி. வி. பிரகாஷ், சைந்தவி, கடந்த 2013 ஆம் ஆண்டு, ஜூன் 27 ஆம் தேதியன்று சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு தங்களின் பெண் குழந்தையை வரவேற்றனர்.

இந்நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்றைய தினம் இருவரும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரே மாதிரியான பதிவினை வெளியிட்டிருந்தனர்.

இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருவருக்கொருவர் மேல் இருக்கும் பரஸ்பர மரியாதையை பேணுவதின் வாயிலாக, தங்களது மன அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக நீண்ட யோசனைக்கு பின்பு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அதாவது 11 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு தங்களது பாதையில் செல்ல முடிவெடுத்துள்ளதாகவும், எங்களது தனிப்பட்ட கருத்தை அனைவரும் புரிந்து கொண்டு, மதிப்பளிக்குமாறு கேட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles