23.2 C
New York
Sunday, July 13, 2025
spot_img

கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர்.

Related Articles

Latest Articles