சந்தையில் வாங்கப்படும் பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக, அரச வைத்தியர்கள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மற்றும் வைத்தியர் தெரிவித்திருந்தார்.
இந்த பொம்மைகளில் லித்தியம், சில்வர் ஆக்சைடு மற்றும் அல்கலைன் பட்டன் பேட்டரிகள் இருப்பதால், குழந்தைகள் அவற்றை விழுங்கி, காது அல்லது மூக்கில் வைக்கலாம் என்று வைத்தியர் கூறினார்.
இந்த மின்கலங்களை குழந்தைகள் விழுங்கினால், அதன் மின் இரசாயனச் செயற்பாட்டின் ஊடாக குழந்தைக்கு உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் என வைத்தியர் பாலித ராஜபக்ஷ மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
உணவுக் பாதையின் (உணவுக் குழாய்) முதல் பகுதி இயற்கையாகவே குறுகலாக இருப்பதால், இவற்றை விழுங்கும்போது அதிகபட்ச சேதம் (துளை) ஏற்படக்கூடும் என்றும், விழுங்கப்பட்ட பேட்டரி வயிற்றில் பயணித்து கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்தார்.