24.4 C
New York
Tuesday, July 1, 2025
spot_img

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றையதினம் குடும்பஸ்தர் ஒருவர் பலி

அதிக வெப்பம் காரணமாக யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றையதினம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று மதியம் 1.45 மணியளவில் மதுபோதையில் இருந்ததை அவரது மகள் அவதானித்துள்ளார்.

பின்னர் 3.30 மணியளவில் அவர் வெயிலில், கீழே விழுந்து இருந்ததை அவதானித்துள்ளார்.

அருகில் சென்று பார்த்தவேளை அவர் உயிரிழந்து காணப்பட்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Related Articles

Latest Articles