-1.5 C
New York
Thursday, January 16, 2025
spot_img

யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்தியர்கள் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பப் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள யாழ். போதான வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் பேரானந்தராஜா, ஹீட் ஸ்ட்ரோக் மூலம் வைத்தியசாலையின் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றமையால், வெப்பநிலை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Latest Articles