24.9 C
New York
Saturday, July 27, 2024
spot_img

உடல் எடையை குறைக்க

அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு. அதுபோல தான் நெய்யும். அனைத்து உணவிலும் கரண்டி கணக்கில் ஊற்றி சாப்பிட்டால் கண்டிப்பாக நீங்கள் உடல் பருமனாக தான் திகழ்வீர்கள். ஆனால், அன்றாட உணவில் ஒரு டீஸ்பூன் அளவு நெய் சேர்த்துக்கொள்வது அதே உடல் எடையை குறைக்க பயனளிக்கிறது.

உடல் எடையை குறைக்க பயிற்சி மட்டும் போதாது, உணவின் மீதான கவனமும் தேவை. இவை இரண்டையும் சம நிலையில் பின்பற்றினால் தான் உடல் எடையை சீரான முறையில் சரியாக குறைக்க முடியும். நெய்யில் இருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நெய் சாப்பிட வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள்

வைட்டமின்கள்

நெய்யில் கொழுப்பை கரைக்க உதவும் உயர்ரக வைட்டமின் எ, டி, ஈ மற்றும் கே இருக்கிறது. வைட்டமின் எ மற்றும் ஈ-யில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் இருக்கிறது. மற்றும் வைட்டமின் டி எலும்பின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும், வைட்டமின் டி தசை வலி மற்றும் அழற்சியை போக்குகிறது. வைட்டமின் கே இரத்தத்தில் கட்டிகள் உண்டாவதை குறைக்கிறது. மேலும், இரத்தத்தின் வலிமை மற்றும் அடர்த்தியை சமநிலையில் வைத்துக் கொள்ளும் வைட்டமின் கே அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும்

கொலஸ்ட்ரால்

நிறைவுற்ற கொழுப்பு உடலில் தீய கொழுப்பு என கூறப்படும் எல்.டி.எல் கொழுப்பை அதிகரிக்க செய்கிறது. இதனால் தான் இதய நலன் மிகவும் சீர்கெடுகிறது. இதய நலன் சீர்கெடுவதால் இரத்த ஓட்டத்தின் வேகமும் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் எதிர்ப்பு சக்தி

நமது முன்னோர்கள் மதிய உணவில் ஒரு வேளையாவது ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் கொண்டிருந்தனர். அதற்கு காரணம் நெய்யில் இருக்கும் உயர்ரக ஊட்டச்சத்து உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

இது மட்டுமின்றி, ஞாபக சக்தி மற்றும் கவனத்தை ஒருநிலை படுத்துதல் போன்றவைக்கும் கூட நெய் நல்ல பயனளிக்கிறது.

விந்து திறன்

நெய் உடலில் புரதம் மட்டும் கொழுப்பை சமநிலையாக வைத்துக் கொள்ள பயனளிக்கிறது. நீங்கள் உட்கொள்ளும் நெய் வீட்டில் தயாரிக்கப்பட்ட தூய நெய்யாக இருந்தால் அது கண்டிப்பாக உங்கள் கருவளம் மற்றும் விந்தின் திறனை ஊக்குவிக்கும்.

செரிமானம்

செரிமான மண்டலம் சீராக செயற்பட நெய் உதவுகிறது. நெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு எச்.டி.எல் கொழுப்பானது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. செரிமானம் சரியாக ஆவதால் உடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும்.

Related Articles

Latest Articles