யாழ், புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்துடன், வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த எலும்புக்கூடு புதையுண்டு இருந்த நிலையை பார்க்கும் போது, உரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றமையால் இது நல்லடக்கம் செய்யப்பட்ட சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுத் தொகுதி , அவற்றுடன் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட நீதவான் அது தொடர்பில் பகுப்பாய்வு பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். இதனையடுத்து அகழ்வு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.