வாகன இறக்குமதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கை தொடர்பாக, ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு சில அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.