இத்தாலியில், வெனிஸ் நகரை சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டினருக்கு ஒருநாள் கட்டணமாக 5 யூரோவை வசூலிக்கவுள்ளதாக, நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறை சுற்றுலா ஆர்வலர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நகரவாசிகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீசன் நாட்களில் கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணமும் உள்ளதாக நகர நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.