இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் காரொன்றுடன் ட்ரிப்பர் ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 23 வரை பேர் படு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சத்தீஸ்கர் மாநிலம் பிமிதரா மாவட்டத்தில் அதிவேக வீதியில் பயணித்த, பொருட்களை ஏற்றிச்சென்ற ட்ரிப்பர் ரக வாகனமொன்று வேகக் கட்டுப்பாடின்றி, வீதியோரம் நின்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.