22.3 C
New York
Saturday, July 27, 2024
spot_img

தலைமுடி முதுகிற்கு கீழ் வளர சூப்பர் டிப்ஸ்!

நாமும் தலைமுடி வளர என்னென்னமோ பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தலைமுடி முதுகிற்கு கீழ் வளர மாட்டிங்கிறது என்று அனைவரும் புலம்பி தீர்ப்போம். பொதுவாக தலைமுடி வளர்வதற்கு நல்ல ஊட்டச்சத்து தேவை. முடிவிற்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருப்பதால் தான் முடி வளராமல் இருக்கும்.

எனவே முடி வளர்ச்சிக்கு தேவையான சில பொருட்களை நாம் சாப்பிட வேண்டும். அதேபோல், தலைக்கு நேரடியாக அப்ளை செய்தும் வர வேண்டும். எனவே அப்படி ஒரு சூப்பரான முடிக்கு நல்ல ஊட்டச்சத்தினை அளிக்க்கக்கூடிய வெந்தயத்தை முடிக்கு எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

வெந்தய எண்ணெய் பயன்படுத்தவும்:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து சூடுபடுத்துங்கள்.

அடுத்து, இதனை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு பாட்டிலில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை நீங்கள் தலைகுளிப்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாக தலையில் நன்கு அப்ளை செய்து ஊறவைத்து அதன் பிறகு குளிக்க குளிக்க வேண்டும்.

வாரத்தில் மூன்று முறை பயன்படுத்தினால் போதும்.. உங்கள் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதை நிங்களே உணரலாம்.

வெந்தயம் ஹேர் பேக் பயன்படுத்தவும்:

முதலில் உங்கள் முடியின் அளவிற்கு தகுந்தவாறு வெந்தயத்தை ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள்.

மறுநாள் காலையில் எடுத்து வெந்தயம் ஊறிய தண்ணியுடன் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியின் வேர்க்கால்கள் முதல் நுனிப்பகுதி வரை அப்ளை செய்து 30 நிமிடத்திற்கு பிறகு தலையை அலசி விடுங்கள்.

வெந்தயத்தில் உள்ள ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் முடி உதிர்தலை தடுத்து முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது.எனவே, முடி வளர்ச்சியை அதிகப்படுத்த வெந்தயம் ஓன்று போதும்..!

Related Articles

Latest Articles