16.1 C
New York
Sunday, September 8, 2024
spot_img

கருப்பு உதடு சிவப்பாக மாற எளிய வழிமுறை!

கருமை நிற உதடுகளை இளஞ்சிவப்பு நிற உதடாக மாற்றுவது இயலாத காரியம் எல்லாம் அல்ல. கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் கவனம் இருந்தால் அழகான உதடுகளைப் பெற்று விடலாம். இளவயதினர் வெகு அரிதாகவே இந்தப் பாதிப்புக்கு ஆளானாலும் வயது அதிகமாகும்போது பெண்களும் இருண்ட கருமையான உதடுகளைப் பெறுகிறார்கள்.

Advertisements

புகைப்பிடிக்கும் பழக்கம், மோசமான உணவுப் பழக்கங்கள் போன்றவை எல்லாமே உதட்டின் மீது பிரதிபலிக்கச் செய்யும். மேற்கொண்ட இதற்கான காரணங்களை ஆராய்வதை காட்டிலும் எப்படி வீட்டு வைத்திய முறையில் அதைத் திரும்பப் பெறுவது என்று பார்க்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரி நிறமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகானது. ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாகக் கலக்க வேண்டும். இதைத் தினமும் இரவு தூங்கும்போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.

பாலும் மஞ்சளும்:

காய்ச்சாத பாலுடன் மஞ்சள் சிட்டிகை சேர்த்ஹ்து நன்றாகக் குழைக்கவும். இதைக் கருப்பான உதட்டின் மீது தடவி பேக் போல் போடவும். 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் உதட்டைக் கழுவி எடுக்கவும். வாரத்துக்கு மூன்று நாட்கள் இந்தப் பேக் பயன்படுத்தினால் உதட்டின் கருமை மறையக்கூடும். மஞ்சள் உதட்டு சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கிச் சுத்தம் செய்யும்

எலுமிச்சை சாறு:

சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்துக்கு சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். எனினும் இதை நீர்த்து அல்லது எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாகக் கலக்கவும். இதை உதட்டின் மீது தடவி நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு மீண்டும் இந்தக் கலவையை மேல் அடுக்கில் தடவவும்.

நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டைக் கழுவ வேண்டும். எலுமிச்சை இயற்கை சுத்தப்படுத்தியாக இருப்பதால் இது கறைபடிந்த உதடுகளை வெண்மையாக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

வைட்டமின் இ:

வைட்டமின் இ சருமத்துக்கு செய்யும் நன்மைகள் அறிந்திருக்கிறோம். இது உதட்டின் கருமையை போக்கி மென்மையான உதட்டை அளிக்கவும் செய்கிறது. வைட்டமின் இ சருமத்துக்கு அற்புதமான தீர்வு அளிக்கும். இதை உதடுகள் சோர்வாக இருக்கும் போதெல்லாம் தடவி வந்தால் உதடுகளுக்கு நீரேற்றம் கிடைக்கும். வாரம் ஒருமுறை இதைச் செய்யலாம்.

காய்கறி சாறு:

வீட்டில் கேரட் அல்லது பீட்ரூட் இருக்கும் போதெல்லாம் அதன் மேல் தோலை நீக்கிச் சிறுதுண்டை இடித்துச் சாறு பிழியலாம். இந்தச் சாறை உதட்டின் மீது தடவி வருவதன் மூலம் உதட்டின் நிறம் மேம்படும். நேரமிருக்கும்போது கேரட், பீட்ரூட் துண்டை மசித்து அந்த விழுதை உதட்டின் மீது தடவி விடலாம். செயற்கையாக இல்லாமல் இயற்கையாக உதட்டுக்கு நிறம் அளிக்கக் கூடியவை இவை. இது சிவப்பு நிறத்தை உதட்டுக்கு அளிக்கும்.

ஆரஞ்சு பவுடர்:

ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொள்ளுங்கள். இது சருமம், கூந்தல் என அனைத்துக்குமே நன்மை தரும். உதட்டின் நிறத்தை மேன்மைப்படுத்தும் ஆரஞ்சு பொடியைக் கொண்டு உதட்டின் நிறத்தை மீட்கலாம்.ஆரஞ்சு பொடியுடன் காய்ச்சாத பாலை சேர்த்து குழைத்து அதை உதட்டின் மீது தடவி பேக் போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து உதட்டைக் குளிர்ந்த நீரில் கழுவி எடுங்கள். தினமுமே இதைச் செய்வதன் மூலம் உதடுகள் மென்மையாக இருக்கும்.

மாதுளை விதைகள்:

உதட்டின் அழுக்கை வெளியெற்ற உதட்டுக்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும். பொதுவாகச் சர்க்கரை சேர்த்த பொருள்களை ஸ்க்ரப் செய்வது போன்று மாதுளை விதைகளைக் கொண்டும் ஸ்க்ரப் செய்யலாம். இது உதட்டின் அழுக்கை நீக்குவதோடு அது கூடுதலாக நிறத்தையும் கொடுக்கும்.க்ரீமி பாலுடன் மாதுளை விதையைச் சேர்த்து நன்றாக இடித்து நசுக்கவும். உதட்டின் மீது பயன்படுத்துவதற்கு முன்பு ரோஸ் வாட்டர் சில சொட்டு சேர்த்து உதட்டின் மேல் ஸ்க்ரப் போன்று சில நிமிடங்கள் செய்ய வேண்டும். பிறகு 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும்.

உருளைக்கிழங்கு:

கருமையான கருவளையத்துக்கு உருளைக்கிழங்கு சாறு உதவுவது போன்று உதட்டின் கருமையை போக்கவும் இது உதவக்கூடும். இது இயற்கை ப்ளீச்சிங் என்பதால் கருமையான உதட்டுக்கு நன்றாக வேலை செய்யும்.

உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி சாறோடு உதட்டின் மீது சில நிமிடங்கள் தேய்க்கவும். உருளைக்கிழங்கு சாறு கருமையோடு அதன் தடம் இல்லாமல் உதட்டை மாற்றிவிடும்.உதடு கருமையாக இருப்பவர்கள் தான் இந்தப் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. எல்லோருமே உதட்டுக்கு இந்தப் பராமரிப்பை மாற்றி மாற்றிச் செய்வதன் மூலம் உதடுகளை அழகாக நல்ல நிறமாக வைத்திருக்கலாம்.

Related Articles

Latest Articles