பண்டிகை நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார கூறியுள்ளார் .
சுமார் 235 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் போது வாகனங்களின் நிலைமை குறித்து அதிக கவனம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளை அறிவுறுத்தியுள்ளது.