பிரேசிலின் பாரா மாநிலத்தில் இருந்து 185 மைல் தொலைவில் கரை ஒதுங்கிய சிறிய படகில் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது
சுமார் 20 சிதைந்த சடலங்கள் இருந்ததாகவும், எனினும் அங்குள்ள மொத்த சடலங்களின் எண்ணிக்கையை வெளியிட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், படகு எந்தப் பகுதியில் இருந்து வந்தது என்பது இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை 2021 ஆம் ஆண்டில், இறந்த உடல்களுடன் குறைந்தது ஏழு படகுகள் பிரேசில் மற்றும் கிழக்கு கரீபியனுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.