17 வயதான மாணவன் ஒருவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் மின்னேரிய கிரித்தல பகுதியில் நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூட்டுச்
குறித்த மாணவன் தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோதே இந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், மின்னேரியா பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயமடைந்த மாணவன் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .