2024 ஆம் ஆண்டுக்கான முதல் பாடசாலை தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளை (10) நிறைவடையவுள்ளது.
குறித்த விடயமானது, கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 24.04.2024 அன்று முதல் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் தொடங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் இது பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.