சுற்றுலா , நவீன விவசாயம் மற்றும் வலுசக்தித் துறைகளில் பரிவர்த்தனை ரீதியிலான மாற்றத்துடன் 2048 ஆம் ஆண்டளவில் வளமான இலங்கையை கட்டியெழுப்பும் பயணத்தை அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குறித்த பயணத்துடன் முன்னோக்கிச் சென்று நாட்டை வெற்றியடையச் செய்யும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது எனத் தெரிவித்த ஜனாதிபதி, கோஷங்களிலும் வாதப் பிரதிவாதங்களிலும் மூழ்கி நாட்டின் எதிர்காலத்திற்கான வேலைத்திட்டத்தை மறந்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இன்று பிற்பகல் நடைபெற்ற “என்னில் இருந்து ஆரம்பிப்போம்” அனுராதபுரம் மாவட்ட இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.