வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும் , பக் பௌர்ணமி தினமான ஏப்ரல் 23ஆம் திகதி மதுபானசாலைகளை மூடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகையால் , மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மதுபானசாலைகளை மூன்று நாட்களுக்கு மூடுவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க சமர்ப்பித்த யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.