உலகெங்கும் இதற்காக அகழாய்வு பணிகளைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்
இதற்கிடையே நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் அந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் கட்டமைத்துள்ளனர். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அந்த பெண் பார்க்க எப்படி இருப்பார் என்பதை விளக்கும் படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியது பலருக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இது தொடர்பாகத் தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் சாம் லூசி கூறுகையில், “நான் முகம் தெரியாத பல நபர்களின் உடல்களை ஆய்வு செய்துள்ளேன். அவர்கள் முகம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே அவர்களின் பழக்கம், உணவு முறை எனப் பல விஷயங்களை ஆய்வு செய்துள்ளேன். இப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெண்ணின் முகத்தைப் பார்ப்பது சற்று மகிழ்ச்சியாகவே இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.