14.6 C
New York
Friday, May 9, 2025
spot_img

இலங்கையில் இப்போது பிரபலமாகும் இஞ்சி கடத்தல்.

இலங்கையில் இப்போது இஞ்சி கடத்தல் பிரபலமடைந்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கம்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், மஞ்சள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டது.

அதனால் சிலநூறு ரூபா விற்ற மஞ்சள், 10 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் விற்கின்ற நிலை உருவானது.

அப்போது, கடல்வழியாக மஞ்சள் மூடைகள் கடத்தி வரப்பட்டன. அவற்றில் பல கடற்படையினரிடம் சிக்கின.

இப்போது, இஞ்சிக் கடத்தல் பிரபலமாகியிருக்கிறது. இலங்கையில் இஞ்சி விலை அண்மையில் 5000 ரூபா வரை உயர்ந்தது. இப்போது 4000 ரூபா வரை விற்கிறது.

இதனால் இந்தியாவில் இருந்து மூடை மூடையாக படகுகளில் இஞ்சி கடத்தி வரப்படுகிறது.

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட  1,456 கிலோ இஞ்சி, நுரைச்சோலை – இலந்தையடி கடற்பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த இஞ்சி கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 மூடைகளில் சிக்கிய இந்த இஞ்சி  ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்டது எனபொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles