70 கிலோ கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் வடக்கு கடல் பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இரண்டு பேரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 70 கிலோ கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 28 மில்லியன் ரூபாய் என கடற்படை தெரிவித்துள்ளது.
கேரள கஞ்சாவை டிங்கி படகில் ஏற்றிச் சென்ற போது கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகும் மேலதிக விசாரணைகளுக்காக மருதங்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.