வருடாந்த QS உலக பல்கலைக்கழக தரவரிசையில், சுவிஸ் பல்கலைக்கழகங்கள் சரிவைச் சந்தித்துள்ளன.
இருப்பினும், ஃபெடரல் டெக்னொலஜி இன்ஸ்டிட்யூட் ETH சூரிச், மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த பல்கலைக்கழகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகம், 2025 பல்கலைக்கழக தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள ஒன்பது சுவிஸ் பல்கலைக்கழகங்களில், மூன்று மட்டுமே, முன்னேறியுள்ளன.
ஏனைய ஆறு பல்கலைக்கழகங்களும் தரவரிசையின் பின்தங்கியுள்ளன.
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது சிறந்த பல்கலைக்கழகமான, சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஒவ் டெக்னொலஜி லுசார்ன் ( Lausanne) , கடந்த ஆண்டு தரவரிசையை விட பத்து இடங்கள் முன்னேறி உலகத் தரவரிசையில் 26 வது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேவேளை, QS பல்கலைக்கழக தரவரிசையின்படி, சூரிச் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இடம்பெறவில்லை. அது 19 இடங்கள் சரிந்து 109வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
Università della Svizzera Italiana (USI) கடந்த ஆண்டை விட 77 இடங்கள் பின்தள்ளப்பட்டு, தரவரிசையில் 407 வது இடத்தில் உள்ளது.
பாசெல் (131), பேர்ண் (161), லுசார்ன் (224) மற்றும் ஜெனீவா ( 155) ஆகிய பல்கலைக்கழகங்களும் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.
EPFL ஐத் தவிர, ஃப்ரிபோர்க் பல்கலைக்கழகம் (539) மற்றும் சூரிச் பயன்பாட்டு விஞ்ஞான பல்கலைக்கழகம் (781-790) ஆகியவையும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளன.