கார்த்திகை பூ பொறித்த பாதணியை விற்பனையில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ள டி.எஸ்.ஐ. பாதணி தயாரிப்பு நிறுவனத்திற்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சிங்கள பிரிவினைவாத்துக்கு எதிராக போராடி மடிந்த மூத்த மாவீரரான தியாகி பொன் சிவகுமாரனுக்கு அஞ்சலியை தெரிவித்து நினைவு கூருகின்றேன்.
அதேவேளை தமிழினத்தின் தேசிய பூவான கார்த்திகை மலரை பாதணியில் பொறித்த டி.எஸ்.ஐ. பாதணி தயாரிப்பு நிறுவனத்திற்கு, நாமும் தமிழ் மக்களும் காட்டிய எதிர்பை ஏற்றுக் கொண்ட அவர்கள், அவ்வாறு கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணிகள் மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்காக அந்த நிறுவனத்திற்கு தமிழ் மக்கள் சார்பாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.