உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100 என அழைக்கப்படும் ஒக்டேன் 100 பெற்றோல் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்தியாவில் இருந்து, ஒரு தொகுதி ஒக்டேன் 100 பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.
சாதாரண பெற்றோலை விட, இதன் விலை மிக அதிகமாக இருக்கும் என்று லங்கா ஐஓசி நிறுவன அதிகாரி கூறினார்.
இந்த வகை பெற்றோல் இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.
இது உயர்- இயந்திர செயல்திறன், வேகமான முடுக்கம், மென்மையான ஓட்டுதல் மற்றும் சொகுசு வாகனங்களில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் சிக்கனத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது. ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் மட்டுமே தற்போது விற்பனையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.