இன்று பிற்பகல் 2 மணியளவில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
17ஆம் திகதி இரவு அவரின் இல்லத்திற்கு சடலம் கொண்டுவரப்பட்டதுடன், நேற்று இரவும் கூட பெருமளவான மக்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் திகதி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததுடன் அப்போது அவருக்கு வயது 64.
அந்த வகையில் அவருக்கு இன்று இறுதி கிரியைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது