22.9 C
New York
Wednesday, September 11, 2024
spot_img

துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்

மன்னாரில் 09 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பித்துள்ளனர்

தலைமன்னார் பகுதியில் அண்மையில் 09 வயது சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

குறித்தநிலையில் , உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை (03) குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை தேடும் பணியில் சிறைக்காவலர்களும், பொலிசாரும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Latest Articles