-4.8 C
New York
Wednesday, January 15, 2025
spot_img

நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை!

நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் அஜித் இன்று பிற்பகல் சென்னையில் அமைந்துள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக வழமையான உடல் பரிசோதனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 4 மணித்தியாலங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மூளையில் இருந்த கட்டியொன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுரை மற்றும் கேரளாவில இருந்து வந்த இரு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அஜித் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles