2024 ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து வைத்த பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் கணிப்புகள் அப்படியே நடக்க ஆரம்பித்துள்ளமை உலக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
1911ஆம் ஆண்டில் ஒட்டமான் பேரரசில் பிறந்தவர் பாபா வாங்கா. இவரது இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா என்பதாகும். 12 வயதாகும் போதே மின்னல் தாக்கியதில் இவரது பார்வை திறன் பறிபோய்விட்டது.
எனினும் அப்போது தான் இவர் எதிர்காலத்தைப் பார்க்கும் சக்தியைப் பெற்றதாகக் கூறப்படுகிறார். 1996இல் இவர் மரமணடைந்த போதிலும் இவரது பல கணிப்புகள் இடமெற்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2024ஆம் ஆண்டு தொடங்கி இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக முடியாத நிலையில், ஏற்கனவே சில விஷயங்கள் உண்மையாக நடக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் எங்கு அவர் கூறிய மற்ற விஷயங்களும் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
பாபா வங்கா கணிப்புக்கள்- கேன்சருக்கான தடுப்பூசி
1) ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேர் கேன்சர் காரணமாக உயிரிழந்து வருகின்றனர். சில குறிப்பிட்ட வகை கேன்சருக்கு சிகிச்சை இருந்தாலும் பல கொடிய வகை கேன்சர் பாதிப்புகளுக்குச் சிகிச்சையோ அல்லது வேக்சினோ இல்லாமலேயே இருந்தது.
இதற்கிடையே கேன்சருக்கான தடுப்பூசியை உருவாக்குவதில் நெருங்கிவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் சமீபத்தில் கூறியிருந்தார். இந்த வேக்சின் மிக விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.