-4.4 C
New York
Monday, December 23, 2024
spot_img

1 கோடியை எட்டும் கச்சதீவு திருவிழா செலவு, இந்திய துாதரகம் மௌனம்! இராமேஸ்வரம் மீனவர்கள் திருவிழாவை புறக்கணிக்க தீர்மானம்.

கச்ச தீவு திருவிழாவிற்கு உத்தேச செலவீனமாக 90 இலட்ச ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் , 10 இலட்ச ரூபாயே திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளதாக யாழ்.,மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

இம்முறை பயணிகளிடம் ஒரு வழி படகு பயண கட்டணமாக ஆயிரத்து 500 ரூபாய் பணம் அறவிடப்படவுள்ளமை , யாத்திரிகர்கள் இம்முறை தமக்கு தேவையான உணவை தாமே கொண்டு வர வேண்டும், 

போன்ற அறிவுறுத்தல்கள் யாழ்.மாவட்ட செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் இந்திய துணைத்தூதரகம் நிதி பங்களிப்புக்களை வழங்கி வந்த நிலையில் இம்முறை அது தொடர்பில் தூதரகம் இதுவரையில் எந்தவொரு தகவலையும் எமக்கு அளிக்கவில்லை என தெரிவித்தார். 

கச்ச தீவு திருவிழா எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் , இலங்கையில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பக்தர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளை , தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படையினர் கைது செய்வதனை கண்டித்தும், அத்துமீறி நுழைத்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், 

இராமேஸ்வர மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ளதாக தீர்மானம் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles