24.9 C
New York
Saturday, July 27, 2024
spot_img

கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய TOP 10 வீரர்கள்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்த சாதனையை அவர் படைத்தார்.

அனில் கும்ப்ளேவுக்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2 வது இந்திய வீரராக அஸ்வின் மாறியுள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கையில், டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 9 வது வீரராக அவர் உருவெடுத்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டாப் 10 வீரர்கள்

1. முத்தையா முரளிதரன் (இலங்கை) – 800 விக்கெட்டுகள்
2. ஷேன் வேர்ன் (அவுஸ்திரேலியா) – 708 விக்கெட்டுகள்
3. ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து) – 695 விக்கெட்டுகள்
4. அனில் கும்ப்ளே (இந்தியா) – 619 விக்கெட்டுகள்
5. ஸ்டூவர்ட் பிராட் (இங்கிலாந்து) – 604 விக்கெட்டுகள்
6. கிளன் மெக்ராத் (அவுஸ்திரேலியா) – 563 விக்கெட்டுகள்
7. கோர்ட்னி வால்ஸ் (மேற்கிந்தியத் தீவுகள்) – 519 விக்கெட்டுகள்
8. நாதன் லயன் (அவுஸ்திரேலியா) – 517 விக்கெட்டுகள்
9. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) – 500 விக்கெட்டுகள்
10. டேல் ஸ்டெயின் (தென்னாப்பிரிக்கா) – 439 விக்கெட்டுகள்

Related Articles

Latest Articles