யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய படுகொலையின் 28 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று(22) இடம் பெற்றது
நாகர்கோவில் மகா வித்தியாலய பாடசாலை மீது 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த படுகொலை சம்பவத்தின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (22) பிற்பகல் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.