ஜெர்மனியில் வீதி போக்குவரத்து விதிகளை மீறும் சுவிஸ் பிரஜைகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் தவறாக வாகனங்களை நிறுத்தும் மற்றும் வேறும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு இவ்வாறு கூடுதல் அளவில் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
ஜெர்மனிய பிரஜைகளுக்கும் இதே சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆண்டு முதல் இந்த புதிய போக்குவரத்து சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் இதன் ஊடாக போக்குவரத்து விதி மீறல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜெர்மனி அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜெர்மனியில், வாகனங்களை தரித்து நிறுத்துதல் உள்ளிட்ட சில போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சுவிஸ் பிரஜைகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது