வவுனியாவில் வீடொன்றினுள் புகுந்த காடையர்கள் , வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு , அவர்களுக்கு தீ வைத்துள்ளனர்.
அதில் 24 வயதுடைய குடும்ப பெண் உயிரிழந்துள்ளதுடன் , 2 வயது குழந்தை , 07 மற்றும் 13 வயதுடைய இரு சிறுமிகள் , 19 – 41 வயதுக்கு இடைப்பட்ட நான்கு பெண்கள் மற்றும் 42 வயது மற்றும் 36 வயதுடைய இரு ஆண்கள் என 09 பேர் தீக்காயங்கள் மற்றும் , வாள் வெட்டு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.