பிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் 11.3 மில்லியன் மக்கள் பசியால் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ட்ரஸ்ஸல் டிரஸ்ட்” (Trussell Trust)என்ற உணவு வங்கித் தொண்டு நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் குறித்த அறிக்கையின் படி பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவர், உணவு வாங்கப் போதிய பணமில்லாமல் தவித்து வருவதாகவும், வாழ்க்கைச் செலவுகள் உயர்வடைந்தமையே இதற்கான காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானியாவின் பொருளாதாரம் உலகில் 6ஆவது இடத்தில் உள்ளபோதிலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிகரித்து வரும் பணவீக்கம், தொழிலாளர்களின் ஊதிய உயர்வை விட மிக அதிகமாக உள்ளதால், அனைத்து தொழிலாளர்களுமே மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது