6.8 C
New York
Tuesday, March 11, 2025
spot_img

யாழில் விபத்து. இரு இளைஞர்கள் மரணம்.

யாழ் அராலி வீதியில் கல்லுண்டாய் வெளி புதிய குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் இருவர் உயிரிழந்தனர்.

இன்று 1 மணி அளவில் அராலி வீதி, கல்லுண்டாய் சந்தியில் இந்த விபத்து நடந்தது.

அராலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த அப்பாச்சி மோட்டார் சைக்கிள் மற்றும் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பிளஸர் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியுள்ளது.

இதில் வட்டுக்கோட்டையை சேர்ந்த ஜெயசுந்தரம் சரோஜன் (29) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் வாகனம் பழுதுபார்ப்பவர்.

இதில், காயமடைந்த 3 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் வட்டுக்கோட்டை சங்கரத்தையைச் சேர்ந்த மகேஸ்வரன் மயூரன் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிரேஷ்ட தாதியராக சேவை செய்து வந்தவர் என்றும் திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இத் துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles