குடியுரிமை அளிப்பதில் நியாயமான விதிகள் தேவை என்று கோரி முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை, சுவிஸ் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முன் வெளிநாட்டினர் 10 ஆண்டுகள் சுவிட்சர்லாந்தில் வசிக்க வேண்டும் என்ற தற்போதைய முறையைப் பராமரிக்க விரும்புவதாகக் கூறி ஏற்கனவே நான்கு முறை நிராகரித்துவிட்டனர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர்.
இம்முறையும் எளிதாக சுவிஸ் குடியுரிமை பெறுவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வியடைந்துள்ளதால், வெளிநாட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.