-1 C
New York
Thursday, December 26, 2024
spot_img

வரி அறவீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் பொதுச் சந்தை வர்த்தகங்கள் இன்று வெள்ளிக்கிழமை (23) சந்தை வளாகத்தில் உள்ள அனைத்து வியாபார நிலையங்களையும் மூடி எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.

மே மாதம் தொடக்கம் தங்களிடம் அதிகரித்த வரி அறவீடு  மேற்கொள்வதற்கு எதிராக இவ் எதிர்ப்பு  போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் 1500 ரூபா வரி மற்றும் கழிவகற்றலுக்காக ஒவ்வொரு வியாபாரியிடமும்  மாதாந்தம் பெறப்பட்டு வந்த நிலையில் மே மாதம் தொடக்கம் 7500 ரூபா வரியாகவும் 600 ரூபா கழிவகற்றலுக்கும் என 8100 ரூபா அறவிடுவதற்கு கரைச்சி பிரதேச சபை தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தே சந்தை வியாபாரிகள் தங்களது வியாபார நிலையங்ளை மூடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சயைால் விலை மதிப்பீட்டுக்கு  கோரிக்கை விடுக்கப்பட்டு அதற்கமைவாக  அதற்கமைவாக வலை மதிப்பீடு செய்யப்பட்டே அதிகரித்த வரி அறவிடப்படுவதாக கரைச்சி பிரதேச சபையின் உத்தியோகத்தர் ஒருவர்  தெரிவித்துள்ளார். இது சட்டரீதியானது எனவும் இதனை மேற்கொள்ளாதுவிடின் கணக்காய்வு விசாரணைகளுக்கு உள்ளாக வேண்டிய நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles