22.9 C
New York
Wednesday, September 11, 2024
spot_img

யாழில் இருந்து சொகுசு பேருந்தில் கஞ்சாவை கடத்திச் சென்ற நபர் கைது!

யாழில் இருந்து வந்த சொகுசுபேருந்தில் கஞ்சாவினை கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து கொழும்புநோக்கி சென்ற சொகுசுபேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது.

சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் 

அதற்கமைய வவுனியா மணிக்கூட்டுகோபுர சந்தியில் இன்று காலை சோதனையில் ஈடுபட்ட பொலிஸார் குறித்த பேருந்தை வழிமறித்து அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 1 கிலோ 900 கிராம் கேரளகஞ்சாவினை மீட்டதுடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

கைதானவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்துவற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles